Rahul Gandhi Shows Constitution Copy to PM Modi 18வது லோக்சபா கூட்டத்தொடர் (Parliament Session) இன்று அதாவது ஜூன் 24ம் தேதி துவங்கிய நிலையில், 18வது மக்களவை உறுப்பினராக பதவியேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் (PM Modi) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) அரசியல் சாசன நகலை காண்பித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi showed a copy of the Constitution to Modi while Modi was taking oath. 🔥🔥#Parliamentsession pic.twitter.com/UbnV0qTkea
— Madhu (@Vignesh_tmv) June 24, 2024
காந்தியைத் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், திமுகவின் டி.ஆர்.பாலு போன்ற தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை இருந்த இடத்தில் கூடினர்.
அரசமைப்புச் சட்டப் பிரதிகளை கையில் ஏந்தியவாறு, “அரசியலமைப்புச் சட்டம் வாழ்க”, “அரசியலமைப்பைக் காப்போம்”, “நமது ஜனநாயகத்தைக் காப்போம்” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
अब गुंडागर्दी का राज नही चलेगा
ये देश सिर्फ संविधान से चलेगा
संविधान के रक्षक! #ParliamentSession #18thLoksabha pic.twitter.com/spkx7JEAD2
— Junaid Akhtar (@JunaidA08499947) June 24, 2024
இது குறித்து பேசுகையில், ராகுல் காந்தி (Rahul Gandhi) பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அரசியலமைப்பு “தாக்குதலை” அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். “…அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமரும் அமித் ஷாவும் (Amit Shah) தொடுக்கும் தாக்குதல் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த சக்தியாலும் இந்திய அரசியலமைப்பைத் தொட முடியாது.
பதவியேற்பதற்கு முன் பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) எதிர்க்கட்சிகளை சாடினார். “நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க, நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை, இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்றார்