வாரணாசியில் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு | ராகுல் கடும் கண்டனம் | Slippers Thrown At Modi’s Car | Rahul Gandhi Condems

ரஃபி முகமது

Slippers Thrown At Modi’s Car வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi)   சென்ற வாகனம் மீது செருப்பு வீசப்பட்டது. இச்சம்பவம் பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கருதப்பட்டாலும், இது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி (Rahul Gandhi)   கூறினார்.

லோக்சபா தேர்தலில் (Lok Sabha Election 2024) வெற்றி பெற்று, 3வது முறையாக ஆட்சி அமைத்த பின், பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi)  முதல் முறையாக, நேற்று, தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு (Varanasi) சென்றார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‘பிஎம் கிசான் சாமேலன்’ திட்டத்தின் 17வது தவணையாக ரூ.20,000 கோடி விடுவிக்கப்பட்டது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி யை   (Prime Minister Narendra Modi) காண சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டனர். அவர்களை பார்த்த மோடி (Prime Minister Narendra Modi)   கைகளை அசைத்து விட்டு சென்றார். மோடியின்  (Prime Minister Narendra Modi)  காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்தன. கூட்டத்தில் இருந்து மோடி (Prime Minister Narendra Modi)  யின் கார் மீது செருப்பு வீசப்பட்டது.

கூட்டத்தில் இருந்து ஒரு செருப்பு பறந்து, பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi)   பயணித்த காரின் முன்பக்கத்தில் விழுந்தது. இதையடுத்து காவலாளி காரில் இருந்த செருப்பை கழற்றி அப்புறப்படுத்தினார். பலத்த பாதுகாப்புடன் சென்ற மோடி (Prime Minister Narendra Modi)  யின் வாகனப் பேரணியின் மீது செருப்பு  வீசப்பட்ட சம்பவமும் பெரும் பாதுகாப்புக் கோளாறாகப் பார்க்கப்பட்டது. மோடி (Prime Minister Narendra Modi)  யின் கார் மீது வீசப்பட்ட செருப்பா? அல்லது வேறு ஏதேனும் பொருள் வீசப்பட்டதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எனினும், இந்த விவகாரம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ரேபராலி தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி (Rahul Gandhi)   இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி (Rahul Gandhi)   தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi)  யின் வாகன அணிவகுப்பு மீது செருப்பு வீசியது கடும் கண்டனத்துக்குரியது. இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடும் கூட. அரசுக்கு எதிரான நமது போராட்டங்கள் காந்திய இயல்புடையதாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை. இவ்வாறு ராகுல் காந்தி (Rahul Gandhi)   பதிவிட்டுள்ளார்

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.