Darshan (#DBoss, #Darshan) Pavithra Gowda Arrested for Renukaswamy Death Case இன்று ரேணுகாசாமி கொலை வழக்கில் (Renukaswamy death case) தொடர்புடையதாகக் கூறி கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை (Darshan Thoogudeepa) மைசூரில் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூர் அழைத்து வரப்பட்டுள்ளார். நடிகை பவித்திர கவுடாவும் ((Pavithra Gowda) கைது செய்யப்பட்டார்.
பலியான ரேணுகாசாமியின் (Renukaswamy death case) உடல் ஞாயிற்றுக்கிழமை காமக்ஷிபாளையாவில் உள்ள மழைநீர் வடிகாலில் கண்டெடுக்கப்பட்டது. தெருநாய்கள் வாய்க்காலில் இருந்து உடலை இழுத்து செல்வதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அடையாளம் தெரியாத ஆணின் சடலம் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்து வந்தபோது, கிரிநகரைச் சேர்ந்த 3 பேர் அந்த நபரின் கொலைக்குப் பொறுப்பேற்று திங்கள்கிழமை போலீஸில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. பண தகராறில் கொலை நடந்ததாக மூவரும் கூறினர்.
காவல்துறையினரின் குறுக்கு விசாரணையில் கொலைக்கான சரியான காரணம் தெரிய வந்தது.
Ajit Sir 😭😭🔥🔥🔥
D boos Dana iddanga avane ante#DBoss #Darshan pic.twitter.com/k2rdtipJGt
— DEMON👿 (@jaknakjak) June 11, 2024
நடிகர் தர்ஷனின் (Darshan Thoogudeepa) உத்தரவின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
கொலையான ரேணுகாசாமி (Renukaswamy death case) தனது சமூக ஊடக கணக்குகளில் நடிகை பவித்ரா கவுடாவவை (Pavithra Gowda) பற்றி ஆபாசமான பதிவுகளை செய்ததாக கூறப்படுகிறது. பவித்ரா கவுடா (Pavithra Gowda) தர்ஷனின் (Darshan Thoogudeepa) நெருங்கிய தோழி என்று கூறப்படுகிறது. தர்ஷன் (Darshan Thoogudeepa) இந்த செய்தியை அறிந்ததும், சித்ரதுர்காவில் ( Chitradurga) உள்ள தனது ரசிகர்கள் சங்கத் தலைவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ரேணுகாசாமி சித்ரதுர்காவிலிருந்து (Renukaswamy Chitradurga) பெங்களூருக்கு (Bangalore) அழைத்து வரப்பட்டு ஒரு கொட்டகைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு சடலத்தை வாய்க்காலில் வீசிவிட்டனர்.
ரேணுகாசாமியின் பெற்றோர் காமக்ஷிபாளையா காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். இது தொடர்பாக காமாட்சிபாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்ஷன் தூகுதீபா (Darshan Thoogudeepa) யார்?
தர்ஷன் தூகுதீபா (Darshan Thoogudeepa) 2012 இல் வெளியான அனதாரு மற்றும் கிராந்திவீர சங்கொல்லி ராயன்னா போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான கன்னட திரைப்பட நடிகர் ஆவார்.
இவர் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உள்ளார். 16 பிப்ரவரி 1977 இல் பிறந்தார், தர்ஷன் தனது தயாரிப்பு நிறுவனமான தூகுதீபா புரொடக்ஷன்ஸை 2006 இல் நிறுவினார். தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் ஜோதே ஜோதியாலு, இதில் தர்ஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தர்ஷன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார்