Telugu Desam Party Flags BJP on Muslim Quota மக்களவை தொகுதி சீரமைப்பு மற்றும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படாமல் இருப்பதையும், எந்த ஒரு சமூகத்தினரின் இடஒதுக்கீடு பறிக்கப்படுவதையும் தெலுங்கு தேசம் கட்சி உறுதி செய்யும் என்று அக்கட்சியின் தலைவரும் என் சந்திரபாபு நாயுடுவின் (Chandrababu Naidu) மகனுமான என் லோகேஷ் நாயுடு (Lokesh Naidu) இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு பேசிய லோகேஷ் (Lokesh Naidu), 16 எம்.பி.க்களுடன் என்டிஏ-வின் (NDA) இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள நிலையில், தனது மாநிலத்தில் 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீடு (Muslim Quota) பற்றி பேசுகையில், முஸ்லீம் சமூகம் கவலைப்பட ஒன்றுமில்லை என்றார்.
தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party) எப்போதும் மதச்சார்பற்ற கட்சியாகவே இருந்து வருகிறது. யாருடைய ஒதுக்கீடும் எங்களால் பறிக்கப்படாது. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார். பாஜக (BJP) தனித்து ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை (Muslim Reservation) நீக்கும் ஆனால் இது கூட்டணி அரசாங்கமாக இருக்கும்போது அது நடக்காது என்றார். எந்த ஒரு சமூகத்தினரின் இடஒதுக்கீட்டையும் தெலுங்கு தேசம் கட்சி திரும்பப் பெறாது என்பதை உறுதியளித்தார்.
பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நீட்டித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது என்று கூறியிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன், அதன் முதல் பணிகளில் ஒன்று ஆந்திராவில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு வழங்குவது என்று அவர் கூறியிருந்தார். 2004 மற்றும் 2010 க்கு இடையில், ஆந்திராவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் நான்கு முறை அமல்படுத்த முயன்றது, ஆனால் சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, அதை நிறைவேற்ற முடியவில்லை. 2011 இல், நாடு முழுவதும் அதை செயல்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. நாங்கள் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்குவோம்” என்று அவர் கூறியிருந்தார்.
ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களின் நலன்களும் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் பாஜக தனித்து முடிவெடுக்க தெலுங்கு தேசம் கட்சி அனுமதிக்காது என்பதை லோகேஷ் நாயுடு உறுதிப்படுத்தியுள்ளார்.