Nitin Gadkari நேற்று , ஜூன் 7ஆம் தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது, இதில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் (BJP) 240 எம்பிக்களும், கூட்டணிக் கட்சிகளின் 50க்கும் மேற்பட்ட எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில், நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(NDA) தலைவராக அதாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜூன் 9ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த சலசலப்புக்கு இடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கூட்டத்தில் நடந்த சில சம்பவங்கள், பாஜகவில் (BJP) பீதியை கிளப்பியுள்ளது. தற்போதைய மோடி (Narendra Modi) அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியின் எம்.பி.யான நிதின் கட்கரியை (Nitin Gadkari) மையமாக வைத்து வெளியிடப்பட்ட வீடியோக்கள், பாஜக (BJP) வில் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
Watch how Nitin Gadkari refused to stand up and chant Modi Modi .
Glad someone showed the spine to resist this distasteful circus.
What a video 😂🔥 pic.twitter.com/R3CH6JtO92
— Roshan Rai (@RoshanKrRaii) June 7, 2024
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி (Narendra Modi) தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்களின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிதின் கட்கரி (Nitin Gadkari) எழுந்து நின்று கைதட்டாமல் இருந்தார்
இதை வைத்து ஆர்எஸ்எஸ் (RSS) ஆதரவுடன் நிதின் கட்கரி (Nitin Gadkari) பாஜக (BJP) வில் இருப்பதாகவும், மோடி (Narendra Modi) , அமித்ஷா (Amit Shah) ஆதிக்கத்தை அவர் எதிர்ப்பதையே இந்த ஓரிரு நிமிட காட்சிகள் வெளிப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதின் கட்கரியும் (Nitin Gadkari) தனது கருத்தைத் தெரிவித்ததோடு, நரேந்திர மோடி (Narendra Modi) இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெருமை என்றும் கூறினார்.
ஆனால் நிதின் கட்கரி (Nitin Gadkari) யின் முகம் மற்றும் சைகைகளில் இருந்து பார்லிமென்ட் நெறிமுறைகளை மதித்து நிதின் கட்கரி (Nitin Gadkari) இவ்வாறு கூறியதாக தெரியவில்லை என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் (RSS) எம்பிக்கள் தெரிவித்தனர்.
அதற்கான பின்னணியையும் தருகிறார். நிதின் கட்கரி (Nitin Gadkari) ஆர்எஸ்எஸ் (RSS) . தலைமையகமான நாக்பூரில் இருந்து மூன்றாவது முறையாக எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவுக்கு (BJP) தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் (RSS) கணித்திருந்தது. அதனடிப்படையில் பாஜக (BJP) வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மோடியே (Narendra Modi) பிரதமர் பதவியை பிடிக்க மாட்டார். பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் (RSS) திட்டமிட்டுள்ளது,
நிதின் கட்கரி (Nitin Gadkari) மற்றும் கர்நாடகாவின் தார்வாட் எம்பி பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பால் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வரிசையில் இருந்தனர்.
ஆர்எஸ்ஸின் (RSS) இந்தத் திட்டத்தை அறிந்த மோடி (Narendra Modi) மற்றும் அமித்ஷா (Amit Shah) கடந்த தேர்தலில் கட்காரிக்கு Nitin Gadkari) போட்டியிட வாய்ப்பளிக்கக் கூட மறுத்துவிட்டனர். ஆனால் ஆர்எஸ்எஸ் (RSS) -ன் அழுத்தத்தால் கட்காரி Nitin Gadkari) அந்த வாய்ப்பைப் பெற்றார். இது மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் பாஜக (BJP) வின் போஸ்டர்களில் கட்காரியின் Nitin Gadkari) படங்கள் இல்லை. இதையெல்லாம் மீறி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
எதிர்பார்த்தது போலவே மோடி (Narendra Modi) யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த ஆர்எஸ்எஸ் (RSS) 240 இடங்களை மட்டுமே பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் (RSS) ஸுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ‘பாஜக (BJP) வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மோடி (Narendra Modi) மீண்டும் பிரதமர் பதவியை வகிக்கக் கூடாது. பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து அவரே விலக வேண்டும். “மோடி (Narendra Modi) ஒதுங்கி நிற்க வேண்டும், கழுத்தில் பிடித்து வெளியேற்றும் வரை காத்திருக்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மம்தா பானர்ஜியிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, பாஜக (BJP) வில் இருந்து மோடியைத் (Narendra Modi) தவிர வேறு யாராவது பிரதமரானால் அவருக்கு உங்கள் ஆதரவு தேவை என்றார். தற்போதைய பாஜக (BJP) எம்.பி.க்களில் 40க்கும் மேற்பட்டோர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள். மோடிக்கு (Narendra Modi) பதிலாக யாரை முன்னிறுத்துவது என்ற விவாதம் அவர்களுக்குள் நடந்து வந்தது.
இதற்கிடையில், மோடிக்கு (Narendra Modi) எதிரான முயற்சிகளை அறிந்த அமித்ஷா, மோடி (Narendra Modi) க்கு எதிரான ஆர்எஸ்எஸ் (RSS) நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தால் அசிங்கமாகிவிடும் என்று எச்சரித்து முறியடித்தார்.
இதற்குப் பிறகுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (NDA) கூட்டத்தில் மோடி (Narendra Modi) பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் மோடிக்கு (Narendra Modi) ஆதரவாக நிற்பதற்கு பதிலாக நிதின் கட்கரி (Nitin Gadkari) தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.