Share Market இன்று திங்கள்கிழமை காலை பங்குச்சந்தை எப்போதும் இல்லாத உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து முக்கிய வர்த்தக தளங்கள் முடங்கின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது. CDSL வலைத்தளத்திற்குப் பிறகு பிரபலமான வர்த்தக தளங்களான Zerodha, Groww மற்றும் Upstox ஆகியவை செயலிழந்தன. பெரும் அளவிலான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டதின் காரணமாக இந்த தளங்கள் முடங்கின
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் மட்டும் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் ரூ.11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Central Depository Services Limited (CDSL), நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) ஆகியவை இந்தியாவில் உள்ள மத்திய பத்திர வைப்புத்தொகைகளாகும். இந்த சேவைகள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்குகின்றன. இரண்டுமே செக்யூரிட்டி எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா செபியால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு ஜூன் 1ம் தேதி வெளியானது
ஜூன் 3 ஆம் தேதி திங்கட்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 3 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
We’re experiencing difficulties connecting with CDSL on the Zerodha app, which means I can’t sell my stocks right now. 😳😳 #Zerodha #Cdsl It seems to happen on the most crucial days. @zerodhaonline @CoinByZerodha @CdslIndia pic.twitter.com/Bo9650i26v
— Tenkasi ViKi (@TenkasiViki) June 3, 2024
ஜூன் 1 ஆம் தேதி கருத்துக்கணிப்பு வெளியான பிறகு, இந்திய சந்தைகள் திங்களன்று பச்சை நிறத்தில் தொடங்கியது, சென்செக்ஸ் 2568.19 புள்ளிகள் அதிகரித்து 76,529.50 ஆகவும், நிஃப்டி 578.70 புள்ளிகள் அதிகரித்து 23,109.40 ஆகவும் இருந்தது.
காலை அமர்வில் நிஃப்டி வங்கி 1,398.10 புள்ளிகள் உயர்ந்து 50,382.05 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
11:00 IST நிலவரப்படி, பல பயன்பாடுகள் மற்றும் இயங்குதளங்கள் செயல்பட தொடங்கின,