Tamil Nadu Local Body Election Soon: மக்களவை தேர்தலின் (Lok Sabha Election 2024) நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் மூன்று கட்டங்கள் நிலுவையில் உள்ளன. தற்போது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் (M. K. Stalin) தன்னை சந்திக்க வரும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் நாடாளுமன்றத் தேர்தலில் (Lok Sabha Election 2024) நமது வெற்றி நிச்சயம். மேலும், அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும். தற்போது நாடாளுமன்ற தேர்தல் (Lok Sabha Election 2024) முடிந்து விட்டது. அடுத்த தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல் (Tamil Nadu Local Body Election) . 2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் (Tamil Nadu Local Body Election) நடைபெற்றது. அப்போது, நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படவிருந்தன… திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 2021 இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் (Tamil Nadu Local Body Election) நடத்தப்படவில்லை.
ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் (Lok Sabha Election 2024) முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான (Tamil Nadu Local Body Election) அறிவிப்பு அடுத்த சில மாதங்களில், அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மேலும், சில நிர்வாகிகள் 2026 இல் முடிவடையும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் பொது உள்ளாட்சித் தேர்தலை (Tamil Nadu Local Body Election) நடத்தலாம். அதுவரை இந்த 27 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடப்பது போல் தனி அதிகாரியை நியமித்து மாநில அரசே நேரடியாக நிர்வகிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை (Tamil Nadu Local Body Election) நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். .
அதனால், பார்லிமென்ட் தேர்தல் முடிவுடன், அடுத்த தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், அதையடுத்து, தொடர் பரபரப்புக்கு தமிழக அரசியல் களம் தயாராகி வருகிறது