Medical Students Drowned at Sea at Kanyakumari: கன்னியாகுமரிக்கு சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் (Medical Students Drowned at Sea).
நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி 12 இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், நேற்று, 5ம் தேதி திருமணம் நடந்த வீட்டில் தங்கியிருந்தனர்.
கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து இன்று காலை 9 மணியளவில் ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது சிலர் கடலில் கால் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெகுதூரம் கூட செல்லவில்லை. ஆனால் திடீரென கரைக்கு வந்த பெரும் அலை 6 பேரையும் இழுத்துச் சென்றது ( Medical Students Drowned at Sea). ஒரு மாணவர் மட்டும் உயிர் பிழைத்தார். இதில் 3 மாணவிகள், 2 மாணவர்கள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிருடன் மீட்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரி தென்கைப்பட்டணம் கடற்கரைக்கு வந்த பிரேமதாஸ், தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் தண்ணீரில் கால்களை நனைத்தார். அப்போது ராட்சத அலை அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்றது.
அப்போது அங்கிருந்தவர்கள் பிரேமதாசாவை காப்பாற்றினர். ஆனால் 7 வயது ஆதிஷா அடித்து செல்லப்பட்டார். நேற்று முழுவதும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்று வீசுவதால் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பும் எனவும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் இந்திய பெருங்கடல் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரைகளில் இன்று வரை ராட்சத அலைகள் எழும்பும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.