Summer Rain Tamil Nadu: தமிழகத்தின் (Tamil Nadu) சில பகுதிகளில் குறைந்த வளிமண்டல அடுக்குகளில் காற்றின் திசை மாறக்கூடிய பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை தமிழகத்தில் வெப்பச்சலனம் கடுமையாக வீசும் என்றும், மே 5ம் தேதிக்கு பிறகு உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை (Western Ghats), கன்னியாகுமரி (Kanyakumari), திருநெல்வேலி (Thirunelveli) மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி (Western Ghats) மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
பங்குனி பிறந்ததில் இருந்தே தமிழகத்தில் வெப்பம் கடுமையாக உள்ளது. சென்னையில் (Chennai) எல்லாம் மாசி மாதம் முதலே வெயில் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. இப்போது தமிழகத்தில் சென்னையைத் (Chennai) தவிர மற்ற மாவட்டங்கள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2 வாரங்களாக வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் சேலம் (Salem) மற்றும் ஈரோடு (Erode) பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் 110 டிகிரியை தொட்டு வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஈரோடு (Erode) மற்றும் சேலத்தில் (Salem) 108, 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதாவது 5 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும், உள்மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் அதாவது 4 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும் வெப்பம் அதிகரிக்கும்.
அதிகபட்சமாக 108 டிகிரி வெப்பம் பதிவாகலாம். மேலும், 30ம் தேதி (செவ்வாய்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (மே) 1 மற்றும் 2ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் கடுமையான வெப்பச் சலனம் ஏற்படலாம். அதன்பிறகு, 5ம் தேதிக்கு பிறகு உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.