கோவை: அண்ணாமலை தோல்வி?

ரஃபி முகமது

Coimbatore Annamalai Losing: அண்ணாமலை கோயம்புத்துரில் (Coimbatore)  போட்டியிட்டதால் அத்தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிமுக   (ADMK)  வின் வாக்குகளுக்கு பாஜக (BJP)  மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக (ADMK) வின் வாக்குகள் மாறியது போல் தெரியவில்லை.. கோயம்புத்துர் (Coimbatore) லோக்சபா தொகுதிக்கு (Lok Sabha Election 2024)  உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில், சூலூர் (Sulur), பல்லடம் (Palladam) , கவுண்டம்பாளையம் (Goundampalayam) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக   (ADMK)  , திமுக (DMK) கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் பாஜக (BJP) வுக்கு மூன்றாவது இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சிங்காநல்லூர் (Singanallur), கோயம்புத்தூர் வடக்கு (Coimbatore North) மற்றும் கோயம்புத்துர் (Coimbatore) தெற்கு ஆகிய மூன்றும் நகர்ப்புற தொகுதிகள். மற்ற 3 தொகுதிகளை ஒப்பிடுகையில் இப்பகுதிகளில் பாஜக (BJP) வுக்கு சற்று கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பூத்களில் பாஜக (BJP) வுக்கு ஆள்பலம் இல்லை. பல இடங்களில் பூத் ஏஜெண்டுகளாக வெளியூர் ஆட்களை பாஜக (BJP)  நியமித்துள்ளது. திமுக (DMK)வும், அதிமுக   (ADMK)  வும் சேர்ந்து அந்த மக்களை வெளியே அனுப்பியது. கோயம்புத்துர் (Coimbatore) நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் (DMK) பலம், வரும் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு என்பதை தி.மு.க 9DMK) உறுதிப்படுத்தியது. திமுக (DMK) வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்காக சிறப்புக் குழு கோயம்புத்துர் (Coimbatore)யில் முகாமிட்டிருந்தது. இந்த அணி தொடர்ந்து வீடு வீடாக சென்று தி.மு.க.வின் (DMK) வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளியது.. மேலும் தினந்தோறும் கோயம்புத்துர் (Coimbatore) தொகுதியில் நடக்கும் மாற்றங்களை தி.மு.க.வினர் (DMK) அறிந்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்தது.  அண்ணாமலைக்கு எதிராக திமுக (DMK) தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிர பிரச்சாரம் செய்தது.. அண்ணாமலையிடம் வேலை பார்த்தவர்கள் அனைவரும் வெளியூர்க்காரர்கள். மேலும் கோயம்புத்துர் (Coimbatore)யில் உள்ள பாஜக (BJP)  தலைவர்கள் அண்ணாமலை எம்பி ஆவதை விரும்பவில்லை. எனவே கோயம்புத்துர் (Coimbatore)யில் பாஜக (BJP)  ஏற்கனவே பெற்றுள்ள வாக்குகளை பெற்றால் ஆச்சரியம்தான். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்துர் (Coimbatore) தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவானது. இம்முறை 64.8% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர் பதிவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. 2019ல் வாக்களித்த அதே வாக்காளர்களே இப்போது வாக்களிக்கின்றனர். புதிய, வாக்காளர்களின் எண்ணிக்கை சிறப்பாக இல்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக (DMK) கூட்டணிக்கு 45% வாக்குகளும், அதிமுக   (ADMK)   – பாஜக (BJP)  கூட்டணிக்கு 31% வாக்குகளும் கிடைத்தன. அ.தி.மு.க கூட்டணி பெற்ற வாக்குகளில் அந்தந்த கட்சிகளின் பலத்தைப் பார்க்கும்போது அ.தி.மு.க.வுக்கு 20% வாக்குகளும், பா.ஜ.கவுக்கு 11% வாக்குகளும் கிடைத்தன என்று சொல்லலாம். இப்போது தி.மு.க., ஆட்சியில் இருப்பதால், மக்கள் மத்தியில் நிச்சயம் அதிருப்தி ஏற்படும். அதனால் திமுக (DMK)வுக்கு 7% வாக்குகள் விழும் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதன் அடிப்படையில் திமுக (DMK) கூட்டணியின் வாக்கு சதவீதம் இம்முறை 38% ஆக குறையும். 

அதிமுக   (ADMK)   இந்த முறை கோயம்புத்துர் (Coimbatore)யில் ஓட்டுக்கு ரூ.250 வழங்கியது. மேலும் பூத் செலவுகளுக்கும் ஏராளமான பணம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக   (ADMK)   தனது 20% வாக்குகளை நிச்சயம் தக்க வைக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ., வெற்றி பெற வேண்டுமானால், 14 சதவீதத்தில் இருந்து, 38 சதவீதத்தை தாண்ட வேண்டும்.

கோயம்புத்துர் (Coimbatore) தொகுதியில் மொத்தம் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 64.8% வாக்குகள் பதிவாகி மொத்தம் 13,65,000 வாக்குகள் பதிவாகியுள்ளன. அண்ணாமலையின் வாக்குகள் திமுக (DMK)வை மிஞ்ச வேண்டுமானால், பாஜக (BJP)  கடந்த முறை பெற்றதை விட 3,27,000 வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும்.

இந்த முறை இவ்வளவு ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு மாற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழலாம். ஆனால், அண்ணாமலைக்கு இத்தனை ஓட்டுகள் போகும் அளவுக்கு கோயம்புத்துர் (Coimbatore)யில் பெரிய அலை வீசவில்லை என்பதை வாக்கு சதவீதம் மாறாமல் இருந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,

எனவே, இந்தத் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் இருக்காது

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.