Criticism For Modi’s speech: ராஜஸ்தானில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) , காங்கிரஸ் (Congress Party) மற்றும் முஸ்லிம்களுக்கு (Muslim) எதிராகப் பேசியது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election 2024) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் இருந்து 13 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. இதற்கான இறுதிகட்ட பிரசாரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) முஸ்லிம்களுக்கு (Muslim) எதிராக பேசினார் (Speech Targeting Muslims)
தாலியைக் கூட விடுவதில்லை!
“நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்குத்தான் (Indian Muslims) முதல் அதிகாரம் என்று ஆட்சியில் அவர்கள் (காங்கிரஸ் (Congress Party) ) சொன்னார்கள், அதாவது உங்கள் (இந்துக்களின்) சொத்துக்களை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவும் நபர்களுக்கும் (முஸ்லிம்கள்) பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வழங்குவார்கள்?
காங்கிரஸ் (Congress Party) ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்,(Prime Minister Manmohan Singh) செல்வத்தில் முஸ்லீம்கள்தான் (Muslim) முதல் அதிகாரம் என்று கூறினார். “சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் மனநிலை என் தாய், சகோதரிகளின் தாலியைக் கூட விட்டுவைக்காது” என்று பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) வெட்கத்துடன் கூறினார்.
பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) யின் பேச்சு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாக்கத் தொடங்கியதையடுத்து, பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) தொடர்ந்து முஸ்லிம்களுக்கு (Muslim) எதிராக பேசி மக்களை கலவரத்தில் ஈடுபடுத்துகிறார் என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சவாலை ஏற்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) தயாரா? – காங்கிரஸ் (Congress Party)
இது குறித்து தேசிய காங்கிரஸ் (Congress Party) செய்தித் தொடர்பாளர் பவன் கெராவும் (Pawan Kera) பேசுகையில், “பிரதமர் மீண்டும் பொய் சொல்கிறார், காங்கிரஸ் (Congress Party) கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்து முஸ்லீம் என்று எந்த ஒரு வரியாவது எழுதப்பட்டிருந்தால் அதை எங்களிடம் காட்டுங்கள் என்பது எங்களின் சவால். பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) தயாரா? எங்கள் சவாலை ஏற்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதேபோல் காங்கிரஸ் (Congress Party) மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் (Jairam Ramesrh) , ” பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) யால் தவறுதலாக கூட உண்மையை சொல்ல முடியாது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) யின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் கண்டனங்கள் (Criticism for Modi’s Speech)
இதேபோல் பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்