ED Declines to Investigate Nainar Nagendran Case
நயினார் நாகேந்திரனின் (Nainar Nagendran) உதவியாளரிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை (Enforcement Directorate) விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) இன்று (ஏப்ரல் 22) விளக்கம் அளித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் (Tambaram Railway Station) பாஜக (BJP) வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் (Nainar Nagendran) உதவியாளரிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை (Enforcement Directorate) விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனை (Nainar Nagendran) தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என நெல்லை (Tirunelveli) தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) 2 வழக்குகள் தொடர்ந்தார்.
ஏப்ரல் 18ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை (Election Commision) தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court), கடைசி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate), “பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவுகளின் பிரிவுகளின்படி பார்த்தால், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றமாகக் கருத முடியாது. இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை (Enforcement Directorate) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நெல்லை (Tirunelveli) எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தரப்பு வழக்கறிஞர் தாம்பரம் காவல் நிலையத்தில் (Tambaram Police Station) மனு தாக்கல் செய்துள்ளார்.