திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார் ! Police Carried Away DMK Executive From Polling Booth

ரஃபி முகமது

Tamil Nadu Election 2024 Coimbatore

கோவையில் (Coimbatore ) பூத் சிலிப் (Booth Slip ) வழங்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் மற்றும் திமுக (DMK ) நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திமுக (DMK ) நிர்வாகி பாக்யராஜை குண்டுகட்டாக‌ தூக்கிச் சென்று காவல் துறையினர் (Police ) வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை (Coimbatore ) தொகுதியில் திமுக (DMK ) சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக (ADMK ) சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக (BJP) சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இன்று (ஏப்ரல் 19) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் (Coimbatore PN Pudur ) உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் திமுக (DMK ) உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் (Booth Slip ) கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் அதிகளவில் கூட்டம் கூடியதால், அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக (DMK ) பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும், உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும், இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு பாக்யராஜை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீசார் பொத்தென்று கீழே சாலையில் போட்டனர். இதில் பாக்கியராஜின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டது.

போலீசாரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து திமுகவினர் (DMK ) அங்கு போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து திமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.