சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற எல்லா மாவட்டங்களிலும் இன்று (ஜனவரி 31) முதல் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா என்பதை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் மாதத்தில் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களிடம் செல்வதை உறுதி செய்வர்.
இன்று (ஜனவரி 31) முதல் இத்திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஜமாபந்தி முகாம் போன்றே இந்த முகாமிலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாவட்ட ஆட்சியர்கள், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.
இந்தத் திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்த கட்டம் எனலாம்; ’மக்களிடம் செல்’ என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது